சுமோ முதல் சுமண வரை அநுர சுவிச் மாற்றம்! நடப்பது என்ன....
மட்டக்களப்பு பொது நூலகத்தின் திறப்பு விழா நிகழ்வில் நேற்று(20) தெரிந்த சில திரை இழுப்பு காட்சிகளும், தமிழர்களை கொல்ல வேண்டும் துரத்த வேண்டும் என்பது உட்பட்ட பல ஆவேச கருத்துக்களை வெளியிட்டு தம்மை ராஜபச்ச நிக்காய பிக்குகள் என முழங்கிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பில் வைத்து அநுர சந்தித்து பேசிய காட்சிகளும் சில விடயங்களை சொல்லியுள்ளன.
இலங்கையில் தொழில்முறை அரசியல்வாதிகள் புதிய கதை சொல்லிகளாகவும் தங்களது அரசியல் அடையாளங்களுக்கான சில புதிய பதிவுகளை உருவாக்கும் காட்சிகள் எல்லோம் இப்போது பளிச்சிடுகின்றன.
தன்னுடனான சந்திப்பின் போது அநுர வழங்கிய உறுதிமொழிகள் தன்னை திருப்திப்படுத்தியதால் தான் ராஜபக்ச ஆதரவில் இருந்து விலகி அநுரவிடம் தாவிக் கொள்வதாகவும் சுமணரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளர்.
இதுவரை ராஜபக்ச அரசியல் வம்சத்திற்கு தீவிர விசுவாசம் கொண்டவர்களாகவும் பௌத்த கோட்பாடுகளைக் விட அரசியல் விசுவாசத்துக்குள் நுழைந்து பாரம்பரிய துறவறத்தை கைவிட்ட இந்த அடாவடி காவிகள் இப்போது அநுரவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் அர்த்தம் யாது? என்பது தான் இங்கு வினா.
நேற்று மட்டக்களப்பு பொது நூலகக் கட்டிடத்தில் அநுர கோரிக்கையில் சுமந்திரன் திரை இழுத்த சமகாலத்தில் கொழும்பில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் புதிய பரபரப்பு திரைகள் இழுக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை தழுவிவருகிறது செய்திவீச்சு...