பௌத்த மதத்தின் வரலாற்றை மாற்றிய அநுர தரப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு
தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி, பௌத்த மதத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார் .
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
'ஒரு பௌத்தராக பௌத்த மதத்தைப் பாதுகாப்பதுடன், கத்தோலிக்கம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய மதங்களையும் நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
அதற்காகவே மகாநாயக்க தேரர்களை சந்திக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் .
சேறுபூசும் குழுக்கள்
வரலாற்றில் இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் மற்றும் அதன் சேறுபூசும் குழுக்கள், பௌத்த பிக்குகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.

போர்த்துகேயர், அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட பிக்குகளுக்கு இந்த அளவுக்கு அவமரியாதை நடக்கவில்லை.
மதங்களை அடிப்படையாக வைத்து தாங்கள் ஒருபோதும் அரசியல் செய்வதில்லை.
ஜே.வி.பி போன்ற கட்சிகள் மக்கள் மத்தியில் தங்களுக்குச் சரிந்து வரும் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே மதப் பிரிவினைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்" என்று அவர் விமர்சித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |