பிள்ளையானை பிடித்து சிங்கள தலைமைகளை காப்பாற்ற காய் நகர்த்தும் அநுர
பிள்ளையானை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக காட்டி வரும் அநுர அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள தலைமைகளை விட்டு வைத்திருப்பதாக நாடு கடந்த தமிழீழ அராங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள பேரினவாத்தின் நிலைப்பாட்டத்தைதான் இன்று அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) கையில் எடுத்துள்ளார்.
கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் இலங்கை அரசாங்கம் நல்லாட்சி என்ற மாய மானை உலகிற்கு காட்டி கலப்பு பொறிமுறையொன்றை மேற்கொள்வோம் என வாக்குறுதி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையில் கொடுத்து விட்டு பின்பு ஒரு மாதத்திற்குள்ளேயே அவருடைய ஆட்சியாளர்கள் அப்படியொரு வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்தனர்.
அதையடுத்து, ஐந்து ஆண்டுகள் அதை பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஆட்சியை கடத்திய நிலையில், அநுர அரசாங்கமும் தற்போது அதைத்தான் செய்து வருகின்றது.
எனவே, சிங்கள பேரினவாத்தின் நிலைப்பாடு ஒரு பொழுதும் மாறாது, இன்றும் பிள்ளையான குறித்து சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக அநுர காட்டி வருகின்றார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாக, தமிழர்கள் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள தலைமைகள் எவருக்கும் எதிராக தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் மக்களின் இனப்படுகொலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், குறித்த மோதலினால் இலங்கைக்கு ஏற்படும் ஆபத்து, தமிழ் மக்கள் விடயத்தில் அநுர அராங்கம் எடுக்கபோகும் நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
