யாத்திரை சென்ற இளைஞருக்கு நடந்த அவலம்...
Sri Lanka Police
Anuradhapura
Death
By Dharu
அநுராதபுரம் ஹித்தோகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திபுல்வெவ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
வட்டரெக, பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய குறித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அநுராதபுரத்துக்கு புனித யாத்திரை சென்ற மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் குறித்த ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை

நீரில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹித்தோகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி