அனுராதபுரம் புதையல் தோண்டல் வழக்கு - பிரதி காவல்துறைமா அதிபரும் கைது செய்யப்பட வாய்ப்பு
அனுராதபுரத்தில் அண்மையில் புதையல் தோண்டடிய விவகாரம் தொடர்பில் பிரதி காவல்துறை மா அதிபரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் அண்மையில் புதையல் தோண்டும் முயற்சியின்போது காவல்துறை அதிகாரி ஒருவரின் மனைவி கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, குறித்த பெண்ணின் கணவரான பிரதி காவல்துறை மா அதிபரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரி
தொலைபேசி பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கெமரா காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த பெண்ணின் கணவரான பிரதி காவல்துறை மா அதிபர் குறித்து முடிவு எடுக்கப்படும் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதையல் தோண்டும் முயற்சிகளில் இடம்பெற்ற பகுதியில் ஆலயமொன்றில் இருந்த தனது மனைவியின் செயல்பாடுகள் குறித்து பிரதி காவல்துறை மாஅதிபரான கணவர் அறிந்திருந்தார் என்றும், விசாரணைகளின் போது பல விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 2 மணி நேரம் முன்
