எந்தவொரு நபரும் ஜனாதிபதி ரணிலுடன் கைகோர்க்கலாம்: ஆசு மாரசிங்க புகழாரம்
எந்தவொரு நபரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) கைகோர்த்து நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உழைக்க முடியும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக நேற்று (05) நடைபெற்ற “எக்வ ஜயகமு” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆசு மாரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற போது, அவர் முழு தாய்நாட்டையும் பாதுகாத்தாரே ஒழிய அரசியல் அல்லது தனிப்பட்ட குழுக்களை அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தேர்தல்
அப்போது ஜனாதிபதி பதவியை ஏற்கும் பொறுப்பை புறக்கணித்துவிட்டு, ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்காளர்கள் முன்னிலையில் தங்கள் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு மாரசிங்க, “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை தலைவராக போட்டியிடுகிறார்.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்பதே நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஒவ்வொரு உரையின் சுருக்கமும். நம் எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லுமாறு அவர் அனைவரையும் எப்போதும் அழைத்தார்.
அதனால் தான் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலுக்கு வருகிறார்.சுயேட்சை வேட்பாளராகப்
போட்டியிடுவதில் விசித்திரம் என்னவென்றால், அவரை விமர்சித்த பெரும்பான்மையினர்
பின்னர் அவரைப் புரிந்துகொண்டு ஒன்றாகப் பயணம் மேற்கொள்வதுதான்.
முக்கியமான விடயம்
அதற்கேற்ப இந்தத் தேர்தலில் வாக்கு வங்கி அமைகிறது.அதன் மூலம், நாட்டில் ஒரு உரையாடலை உருவாக்கியுள்ளோம், நாம் எவ்வாறு ஒன்றிணைவது? ஒன்றாக ஒரு இலக்கை அடைவது எப்படி? இது ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கேட்கும் விஷயம் என்று நினைக்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தனக்காகவோ, ஒரு கட்சிக்காகவோ அல்லது எந்தவொரு குழுவுக்காகவோ அல்ல.
இந்த நாட்டை இந்தப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால், இலங்கையின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டுமானால், அவர் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்.
முக்கியமான விடயம் என்னவெனில், ஒரு இனமாகவும் தேசமாகவும் நாம் இலங்கையர்களாக நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார். பிரதேசிய தலைவர்களும் இதை உறுதிப்படுத்துகின்றனர். அதற்காக திரளக்கூடிய அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்குவோம். அதுவே எங்களின் சவாலும் இலக்கும் ஆகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |