தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Dilakshan
2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும்.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை (9) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் நிகழ்நிலை (online) ஊடாக விடைத்தாள் மதீப்பீடு தொடர்பான மேன்முறையீட்டை முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
சமர்பிக்க வேண்டிய முறை
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்