நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சபாநாயகரால் மேலும் சில உறுப்பினர்கள் நியமனம்!
நாடாளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113(2)இன் பிரகாரம், சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று சனிக்கிழமை (18) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது, இதன் பிரதான நடவடிக்கையாக சபாநாயகர் அறிவிப்பு இடம்பெற்றது, இதன்போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை சபைக்கு முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
நியமனம் பெறும் உறுப்பினர்கள்
“நாடாளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113(2)இன் பிரகாரம், சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பிரசன்ன ரணதுங்க, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னியாராச்சி, கஞ்சன விஜேசேகர, அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, மயந்த திசாநாயக்க மற்றும் ரோஹினீ குமாரி விஜேரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு மேலதிக உறுப்பினர்களாக சட்டத்தரணி சுசில் பிரேமஜயந்த, ஜானக வக்கும்புர, இம்தியாஸ் பாகிர் மாகார், ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, இரான் விக்கிரமரத்ன, இசுரு தொடங்கொட, எம்.டப்ளியூ.டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் டீ. வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |