ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் பிரகாசிக்கும் வாள்: வியப்பில் ஆய்வாளர்கள்
ஜெர்மனியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பழமையான வாளின் தன்மை அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக காணப்படும் இந்த வாள் இப்பொழுதும் பொலிவுடன் மின்னுவது ஆய்வாளர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பான பதிவொன்றினையும், ஆய்வாளர்கள் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர், அதில் வாள் தொடர்பாக குறிப்பிட்டுள்ள விடயங்களாவன,
கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
"கல்லறை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த வாள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் பிரகாசிக்கும் அளவுக்கு நல்ல நிலையில் காணப்படுகிறது.
கி.மு. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்று பேர் புதைக்கப்பட்ட கல்லறையிலேயே இந்த வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
New discovery: an exceptionally well-preserved 3,000 years old bronze sword unearthed during excavations in Nördlingen.
— Nina Willburger (@DrNWillburger) June 15, 2023
The sword of the Achtkantschwert type ("octagonal sword" - due to the shape of the hilt) was found in a burial, dating late 14th c. BChttps://t.co/1rjkz4Ug7D pic.twitter.com/fE5gxfoGQ7
இந்த வாள் பவேரியாவின் நோர்ட்லிங்கன் பகுதியிலுள்ள உள்ள ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நினைவுச்சின்னப் பாதுகாப்புக்கான பவேரிய மாநில அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
வெண்கலத்தால் செய்யப்பட்ட வாள்
மேலும், இந்த வாளானது ஆரம்ப காலத்திலிருந்தே சிறப்பாக பராமரிக்கப்பட்டதனை அவதானிக்க முடிகிறது, அதுவும் இன்றுவரையான அதன் பிரகாசத்திற்கு காரணமாகும்.
தவிரவும் இந்த வாள் வெண்கலத்தால் செய்யப்பட்ட எண்கோண கைப்பிடியைக் கொண்டுள்ளது,வெண்கலத்தில் தாமிரம் உள்ளதால் இப்போது இந்த வாலின் கைப்பிடி பச்சை நிறத்தில் உள்ளது.
வெட்டுக் குறிகள் எதுவும் இல்லை
இந்த வாள் கி.மு. 14ஆம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல கல்லறைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், இந்த வாள் குறித்த இரகசியங்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் அரிதான விடயமாக உள்ளது.
அதுமாத்திரமல்லாமல், திறமையான கொதிகலன் தயாரிப்பாளர்கள் மட்டுமே எண்கோண வாள்களை உருவாக்க முடியும் என்பதால் இந்த வாளினை சிறந்த தயாரிப்பாளர்களே தயாரித்திருக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்த வாளின் கத்தியின் மீது வெட்டுக் குறிகள் எதுவும் காணப்படவில்லை என்பதால், இந்த வாள் சில சடங்கு அல்லது குறியீட்டு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |