அதிஷ்டத்தை அள்ளித்தரும் பறவைகள்! இவற்றை வளர்த்தால் கோடிபலன்
இந்தப் பரந்துபட்ட உலகில் எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்கின்றன, அவற்றின் அமைவுக்கேற்றார்ப்போல் குணங்களும், வாழும் தன்மையும், உணவுப்பழக்கம் தொட்டு, ஒவ்வொரு விடயத்திலும் தனித்துவம் காணப்படுகிறது.
இதில், பறவை இனங்களை எடுத்துக்கொண்டால் மன அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் சூழலை உருவாக்கும் விலங்கினமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று அதிஷ்டத்தினை அள்ளித்தரும் ஓர் விலங்கினமாகவும் பறவைகள் பாவிக்கப்பட்டு வருகிறது,
சிட்டுக்குருவி
அந்தவகையில், எந்தப் பறவைகள் நம் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
வீட்டுக்குள் சிட்டுக்குருவி வந்தால் அதனை ஒருபோதும் துரத்தக்கூடாது என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம், அவர்கள் வாக்கில் அத்தனை உண்மை இருக்கிறது.
ஆம், ஏனென்றால் பொதுவாக சிட்டுக்குருவிகள் இலகுவில் வீட்டிற்குள் வருவதில்லை, அப்படி சிட்டுக்குருவி வீட்டிற்குள் வந்தால் அது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நல்ல சகுனமாக இருக்கும் என்பது மரபுவழி நம்பிக்கை.
அதன்படி, சிட்டுக்குருவி நுழையும் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆந்தை
அடுத்ததாக அதிஷ்டம் அள்ளித்தரும் பறவையாக ஆந்தை விளங்குகிறது.
ஆந்தையின் தோற்றம் காரணமாக பலரும் அதனை விரும்புவதில்லை, அதனைக்கொண்டு அச்சம் கொள்வர், ஆனால் ஆந்தை என்பது மகாலட்சுமியின் வாகனமாக திகழ்கிறது.
இந்தியாவின் வட மாநிலங்களில் அதிர்ஷ்ட லஷ்மி ஆந்தையை தான் தனது வாகனமாக கொண்டுள்ளார்.
எனவே ஆந்தை உங்கள் வீட்டிற்குள் நுழைவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக்கூடும் என நம்பப்படுவதால் அதனை விரட்டக்கூடாது என்று கூறப்படுகிறது.
புறா
இந்த பறவைகளின் வரிசையில் அடுத்த இடத்தைப்பிடிப்பது, சமாதான சின்னமும், தூது போகும் பறவையான புறாவாகும்.
புறா வீட்டிற்கு வருவதால் செல்வ வளம் மேலும் அதிகரிக்கும் என்பது ஒரு ஐதீகமாகவே இருந்துவருகிறது.
இதனால் வீட்டிற்கு வரும் புறாக்களுக்கு தானியம் போடுவது, தண்ணீர் வைப்பது, போன்றவற்றால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
புறா மகா லஷ்மியின் உருவமாக கருதப்படுவதனால்,புறா வீட்டிற்குள் வந்தாலோ அல்லது கூடு கட்டினாலோ வீட்லில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது என்று நம்பப்படுகிறது.
எனவே சகல செல்வங்களையும் அள்ளித்தரும் தூதர்களாக விளங்கும் இந்தப்பறவைகள் இனி வீட்டிற்கு வந்தால் அவற்றை துறத்தல் அன்பு செலுத்தி வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று இன்பமுடன் வாழ்வோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
