அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல் விவகாரம்: காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதால், விசாரணை நோக்கங்களுக்காக சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி உடைந்ததால் ஏற்பட்ட சேதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து மீட்க ஹோட்டல் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம்
இந்த நிலையில், ஹோட்டலுக்கு வந்த ஒருவரைத் தாக்கியதாகவும், தனது சொந்தப் பாதுகாப்பிற்காகத் தான் அவரைத் தாக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்தோடு, தண்ணீர் கிளாஸை கொண்டு அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட 30 வயது நபர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)