ஆனையிறவு விவகாரம்: சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி - தடுமாறிய NPP அமைச்சர்
ஆளுங்கட்சியினர் எந்த ஒரு அனுபவமுமில்லாத முகாமைத்துவ தகுதி இல்லாத தங்களுடைய கட்சி சார்ந்த சாதாரண பணியாளர்களை ஆனையிறவு உப்பளத்தில் முகாமைத்துவ அதிகாரிகளாக வேலைக்கு அமர்த்தி இருப்பதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய (23.05.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், ஆனையிறவு உப்பளத்தில் தொழிலாளர்கள் தொழில் விதிமுறைகளுக்கு இன்றியமையாதவாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருப்பதுடன் அவர்களுடைய தொழில் மறுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பரந்தன் உப்பளத்தில் இருந்து உப்பினை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்போவதாக அண்மையில் தெரிவித்தனர் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
