நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி
Sri Lanka Magistrate Court
Ramanathan Archchuna
By Dharu
கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் அங்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் ஊடகவியலாளர்கள் அவரின் வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் வழங்காது நீதிமன்றுக்குள் நுழைந்திருந்தார்.
மேலும் அங்கு நாமலின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூடியுள்ள நிலையில் அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி