அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்!
நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொஸ்கம இராணுவ முகாமில் பணியாற்றும் மேஜர் ஒருவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபாரான மேஜர், பாணந்துறையின் வலான பகுதியில் ஒரு விருந்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மற்றொரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கதின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை
சம்பவத்தின் போது, மேஜரின் மனைவி உட்பட இருவர் காயமடைந்து, பாணந்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பாணந்துறை காவல்துறை தலைமையகத்தின் தலைமையில், குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்