கையூட்டுப் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் கைது
arrest
police officer
vadukkottai
By Vanan
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை காவல் நிலையத்தில் பணியாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வைத்து அவர் இன்று லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இளைவாலை காவல்துறை பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரிடமிருந்து கையூட்டுப் பெற முற்பட்ட போதே ஆனைக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி