செந்தில் பாலாஜி கைது - தவெக கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு: அழுத்தத்தில் அரசியல்வாதிகள்
கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜி (V. Senthil Balaji) தான் காரணம் என கடிதம் எழுதிவிட்டு த.வெ.க நிர்வாகி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெக மற்றும் பொதுமக்கள் வீடியோ வெளியிட்டு வருவதுடன் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
கைது செய்து சிறையில்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் கிளைச் செயலாளர் அய்யப்பன் (வயது 52) என்பவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், கரூர் மாவட்டத்தில் விஜய் வருகையில் போதிய பாதுகாப்பு இல்லை.
நூதன முறையில் நெருக்கடி கொடுத்த செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்வால் ஏற்பட்ட ஆதங்கமே அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
