சட்டவிரோதமாக இலங்கை வர முயன்றவர் கைது
arrest
Sri Lanka
entry
illegally
By Vanan
தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு தனுஷ்கோடி - மெரைன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர், விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருவதற்கு தனுகோடிக்கு வந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மெரைன் காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மெரைன் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீ - மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரிய வந்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி