புராதனை சிலைகளை திருடிய சிறிலங்கா இராணுவ வீரர் கைது
புராதன மதிப்புள்ள சிலைகளைத் திருடியதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் களுத்துறை(kalutara) குற்றப்பிரிவு,தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 39 மற்றும் 25 வயதுடையவர்கள் என்றும், காலி, பத்தேகம மற்றும் கண்டி, கம்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நான்கு கடவுள் சிலைகள் திருட்டு
இங்கிரிய பகுதியில் ஒரு இறையியலாளர் ஒரு கோவிலைக் கட்டி பராமரித்து வந்ததாகவும், நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளும் அந்த கோவிலுக்குச் சென்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கோயிலில் இருந்து நான்கு கடவுள் சிலைகள் திருடப்பட்டதாக அவர் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி இங்கிரிய காவல்துறையில் புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மேற்படி இருவரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் சூட்டு சம்பவம் -யாழ்.நகைகடை கொள்ளை
இதேவேளை மன்னார் நீதிமன்றுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்பு என தெரிவித்து சிறிலங்கா இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் நகைக்கடை ஒன்றில் 30 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்ய்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |