உணவுப் பார்சலுக்குள் கிடந்த பூரான்: தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
Food Shortages
Sri Lanka Police
Trincomalee
By pavan
திருகோணமலை நகரில் உள்ள சைவ விடுதி ஒன்றில் எடுக்கப்பட்ட உணவுப் பார்சலில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்தார்.
குறித்த சம்பவம் நேற்று (17)இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மதிய உணவுக்காக குறித்த சைவ ஹோட்டலில் உணவுபார்சல் கொள்வனவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை

இதற்குள் பூரான் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த கடையை மூடியதுடன் கடை உரிமையாளர் மற்றும் சமையாளரை கைது செய்த காவல்துறையினர் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
குறித்த இருவரையும் எச்சரிக்கையின் பின் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்