பௌத்த மத நம்பிக்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தலதா மாளிகை மற்றும் மகாநாயக்கர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர், மல்வத்து பீடாதிபதி திப்பொடுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோர் இணைந்து காவல்துறைமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
காவல்துறைமா அதிபருக்கு கடிதம்

குறித்த கடித்தில்,
"சில குழுவினர் சமூக ஊடகங்கள் மூலம் தேவையற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலதா மாளிகை மற்றும் மத வழிபாடுகள், பௌத்த மக்களின் நம்பிக்கை, அதன் புனிதத்தன்மையை இழிவுபடுத்தும் மற்றும் குறைமதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது" என காவல்துறைமா அதிபருக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.