ஓய்வை அறிவிக்கத் தயாராகும் இந்திய அணியின் பிரபல வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசியுள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி தொடங்க உள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
சக தமிழக வீரர் பத்ரிநாத்துடன் நடந்த நேர்காணலில் அஸ்வின் தனது வாழ்க்கையில் உள்ள இருண்ட பக்கம் குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர்,
இருண்ட பக்கத்தில் சிக்கியதாக உணர்வு
நான் சாமர்த்தியமாக ஒன்றும் பேசவில்லை. ஆனால் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக நான் மிகவும் இருண்ட பகுதியில் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தேன்.என்னுடைய மனநலத்திற்காக நான் நிபுணர்களின் உதவியை கூட நாடி இந்த இரண்டு வருட காலத்தில் நான் வாழ்க்கையில் அனைத்துமே தயாராக வேண்டும் என்பது குறித்து முடிவெடுத்தேன்.
கிரிக்கெட்டுக்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது தயார் செய்து வந்தேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் தொடர்பாகவும் கடுமையாக உழைத்தேன். துடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பயிற்சி செய்தேன். இதற்காக அமெரிக்காவுக்கு சென்று பேஸ் போல் பயிற்சி கூட எடுத்து வந்தேன்.
இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க சதி செய்யும் ரோகித் : சூடு பிடிக்கும் இந்திய கிரிக்கெட் களம்!
எப்போது அலுப்பு ஏற்படுகிறதோ
காலையில் எழும் போது இன்று பந்து வீச வேண்டுமா துடுப்பாட்டம் செய்ய வேண்டுமா என்ற அலுப்பு ஏற்படுகிறதோ, அப்போதுதான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடியும் என்று அர்த்தம்.அது நடந்தால் உடனடியாக நான் கிரிக்கெட்டை விட்டு விலகி விடுவேன்.
என் அடுத்த வாழ்க்கையில் ஒரு பகுதி குறித்து யோசிக்க போகிறேன் என்று அனைவருக்கும் அறிவித்து விடுவேன் என்று அஸ்வின் கூறியுள்ளார். 37 வயதான அஸ்வின் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |