ஆசிய கிண்ணதொடர் -இலங்கை அணிக்கு மற்றுமொரு பின்னடைவு
ஆசிய கிண்ண தொடர் நெருங்கும் சூழ்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார காயம் காரணமாக குறித்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னதாக, லஹிரு குமார காயம் காரணமாக கடந்த ஜூன் மாதம் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தனது பங்கேற்பைக் குறைக்க வேண்டியிருந்தது. எனினும், அவர் குணமடைந்து, காலி டைட்டன்ஸ் அணிக்காக லங்கா பிரீமியர் லீக்கில் சில போட்டிகளில் கலந்து கொண்டார்.
மற்றுமொரு வீரர் காயம்

குமாரவின் காயத்துடன், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரும் காயங்கள் காரணமாக அணியில் இணைவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொவிட் தொற்று

காயங்கள் ஒருபுறம் இருக்க இரண்டு வீரர்கள் கொவிட்-தொற்றுக்கு இலக்காகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், முதல் ஆட்டத்தில் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் இரு வீரர்களும் மீண்டு வருவதில் நம்பிக்கையுடன் இருக்கும் அதே வேளையில், தொடருக்கான அவர்களின் தயார்நிலை தொடர்பில் நிச்சயமற்ற நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.