சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு

Government Employee Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka
By Sathangani Jun 16, 2026 04:43 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இவ்வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றதாக இலஞ்சம் மற்றும்  ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ், வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரிவினர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் சொத்து விபரங்களை சமர்ப்பித்தவர்களும், புதிய சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட புதிய வகை அதிகாரிகளும் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை திட்டம் அதிரடியாக ரத்து

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை திட்டம் அதிரடியாக ரத்து

இலத்திரனியல் முறைமை

அத்துடன் இந்த ஆண்டு முதல் மத்திய இலத்திரனியல் முறைமையின் ஊடாக மாத்திரமே தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்எஸ்டி ஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு | Asset And Liability Details Submit Before June 30

புதிய சட்டத்தின் கீ்ழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள், பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்,  தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் தேசிய விளையாட்டுச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் விபத்து : பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

திருமலையில் விபத்து : பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

தொலைபேசி இலக்கங்கள்

இந்த நிலையில் அனைத்து விபரங்களும் https://aldciabocgovlk/ என்ற இணையத்தள முகவரியின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 2026 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படியான சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள், ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு | Asset And Liability Details Submit Before June 30

நேற்றைய திகதியில் (15) இருந்து, இந்த விபரங்களை சமர்ப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்பதை ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0767011954 அல்லது 0112587287 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஊழலை ஒழிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தவே சலே கைது: கொந்தளிக்கும் சரத் வீரசேகர

விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தவே சலே கைது: கொந்தளிக்கும் சரத் வீரசேகர


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்