வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு!
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Sathangani
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும உதவித்தொகை கொடுப்பனவு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும உதவித் திட்டத்திற்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அரசாங்கம் நாளை (14.10.2026) வைப்பிலிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குளில் மொத்தம் 2,041,711,250 ரூபாய் (2.04 பில்லியன்) தொகை வரவு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள தொகை
இதேவேளை முதல் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும உதவித் தொகைக்காக 9,123,802,500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பயனாளிகள் நாளை முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் வாயிலாக இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்