முல்லைதீவில் 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்: இரு பெண்கள் உட்பட ஐவர் காயம்
முல்லைதீவில் வீடொன்றில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 இற்கும் மேற்பட்டோர் உட்பகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (16) வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைதீவு பகுதியில் அட்டகாசம்
மேலும் தீவிர சிகிச்சைக்காக ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரு தரபிப்பினர்களுக்கிடையில் நேர்ந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் இந்த தாக்கதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலின்போது வீட்டு கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சி மற்றும் பெறுமதியான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |