நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
பனிமூட்டமான நிலை
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "வெப்பச் சுட்டெண்" காரணமாக மனித உடலினால் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |