யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் (Teaching Hospital Jaffna) திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று (27) இரவு10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.
இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜீன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |