சிரியாவில் இராணுவ கல்லூரி மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவின் போது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 240 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலி எண்ணிக்கை
இந்த தாக்குதலுக்கு இது வரையில் எந்த தரப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
நேற்று (5) விழா முடிவடைந்த நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் விழாவை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் கூறியது.
தாக்குதலுக்குப் பிறகு
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார், ஆனால் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வெளியேறினார்.
இதனை கருத்திற்கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சிரிய அரசு எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டுவதாகத் தெரிகிறது, ஏனெனில் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அவர்களின் விமானங்கள் நாட்டின் வடமேற்கில் உள்ள எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை குறிவைக்கத் தொடங்கியிருகின்றன.