சீலரத்ன தேரர் மீது தாக்குதல்
ஜன சேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த சீலரத்ன தேரர்
இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக பல விசேட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |