களனி பல்கலைக் கழக வைத்திய பீட மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம்! சரத் வீரசேகர பிறப்பித்துள்ள உத்தரவு
களனி பல்கலைக் கழக - ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekera) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசேட அறிக்கை ஊடாக காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரண்டு விசேட காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
ராகம வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் சில மாணவர்கள் மீது விடுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முன்னைய செய்தியினை காண்பதற்கு லிங்கினை அழுத்துங்கள்


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்