தனியார் பேருந்து மீது தாக்குதல் - காவல்துறையில் முறைப்பாடு
மொனராகலையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் அட்டாலிவெவ பிரதேசத்தில் பேருந்தை நிறுத்திய போதே நடத்தப்பட்டுள்ளது.
தடிகளை ஏந்திய சிலர் பேருந்திற்குள் நுழைந்து பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பயணிகள் குழுவொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் முறைப்பாடு

பயணத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி குடோயா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து மொனராகலை - மாத்தறை தனியார் பேரூந்துகள் நேற்று (28) இயங்காது நிறுத்தப்பட்டன.
மொனராகலை - மாத்தறை பேருந்துகள் இன்று (29) காலை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குடோயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.