இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் - தாக்குதல்தாரி சுட்டுக்கொலை!
Cricket
Sri Lanka Cricket
Pakistan
By Pakirathan
2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் டேரா இஸ்மாயில் கான் (Dera Ismail Khan) பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பாலி பயாரா எனும் பல பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரி
அவர் அல்கொய்தா அமைப்பு மற்றும் Tehreek-e-Taliban பயங்கரவாத அமைப்புகளில் உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், பாலி பயாராவை பிடித்து தருபவருக்கு 10.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் வெகுமதியாக வழங்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு படை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி