விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான முயற்சி - சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை: வெளியாகிய குற்றச்சாட்டு

Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lankan political crisis
By Kiruththikan Jan 19, 2023 04:06 AM GMT
Report

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிடையில் வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ்த் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எக்காரணிகளுக்காகவும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது, 13ஆவது திருத்தம் நாட்டுக்குச் சாபக்கேடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டைப் பிளவுப்படுத்துமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் அதிபருக்கு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான முயற்சி - சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை: வெளியாகிய குற்றச்சாட்டு | Attempts To Revive The Ltte

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. இலங்கை நிலப்பரப்பால் சிறிய நாடு, ஒன்பது மாகாணங்கள் ஊடாக அரச நிர்வாகம் வேறுபடுத்தப்பட்டுள்ளமை அவசியமற்றது.

இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வரலாற்று ரீதியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்தித்தான் 69 இலட்சம் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தேவைகளுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தம் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இலங்கையில் 13ஆவது திருத்தம் இந்தியாவின் தேவைக்காகவே அரசமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிறைவேற்றதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை முன்னிலைப்படுத்திச் செயற்படும் இலங்கையில் 13 ஆவது திருத்தம் அவசியமற்றது.

13 ஆவது திருத்தம் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரம் மாகாணங்களுக்கு பகிரப்பட வேண்டும் எனத் தமிழ்த் தலைமைகள் அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள்.

காணி அதிகாரம் மத்திய அரசிடம்

விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான முயற்சி - சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை: வெளியாகிய குற்றச்சாட்டு | Attempts To Revive The Ltte

காணி அதிகாரம் மத்திய அரசிடம் காணப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்க வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆகவே, காணி அதிகாரம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது. காவல்துறை அதிகாரம் மத்திய அரசிடம் மாத்திரம் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் பொறுப்பாக்கினால் காவல்துறை ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாகச் செயற்படும்?

நாட்டில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதுடன், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான பின்னணியில் வடக்கு மாகாணத்துக்குப் காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.

மாகாண சபை முறைமை

விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான முயற்சி - சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை: வெளியாகிய குற்றச்சாட்டு | Attempts To Revive The Ltte

அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஒருசில விடயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை வெள்ளை யானை போன்று பயனற்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

நாட்டைப் பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள் தேசியத்துக்காகப் போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023