மடு திருவிழா தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Mannar
By Sathangani Aug 09, 2023 11:28 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திக் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2ஆவது கூட்டம் இன்றைய தினம் (9) காலை 11 மணியளவில் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றது.

திருவிழா குறித்த கலந்துரையாடல்

மடு திருவிழா தொடர்பில் வெளியான தகவல் | August Month Procession Of Mannar Madu Temple

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், காவல்துறையினர், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் ஆவணி மாதம் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது ஆயர் கருத்து தெரிவிக்கையிலேயே பின்வருமாறு தெரிவித்தார்.

தேவைகளை நிவர்த்தி செய்தல்

மடு திருவிழா தொடர்பில் வெளியான தகவல் | August Month Procession Of Mannar Madu Temple

 “மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாக எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக உரிய திணைக்களங்களின் உதவியோடு, மடு திருத்தலத்திற்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற தேவைகளை உரிய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி  காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மடு திருவிழா தொடர்பில் வெளியான தகவல் | August Month Procession Of Mannar Madu Temple

இம்முறை திருவிழா திருப்பலியை திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.

ஏற்கனவே மடு திருத்தலத்தில் உள்ள விடுதிகள் எல்லாம் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. மேலும் தற்காலிகமாக 500இற்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் வருகை தந்துள்ளனர். மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மடு சந்திக்கான விசேட தொடருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.“ என அவர்  தெரிவித்தார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Mississauga, Canada

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023