கிரிக்கெட் விளையாட விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்: நனவாகப்போகும் கனவு
2027ஆம் ஆண்டுக்குள் கிரிக்கெட்டில் தெற்காசிய நாடுகளின் பங்களிப்பை இரட்டிப்பாக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான தனித்துவமான வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரர்களின் பங்கேற்பு
இதன் மூலம் நாட்டில் வாழும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கிரிக்கெட்டில் பங்குபற்றுவதை அதிகரிக்கவும், மேலும் தெற்காசிய நாட்டினரை விளையாட்டுத் துறைக்கு அழைத்து வந்து போட்டிகளைக் காணவும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது, நாட்டின் முதல் பிரிவு, மாநில மற்றும் பிக் பேஷ் லீக்குகளில் தெற்காசிய வீரர்களின் பங்கேற்பு 4.2% ஆக பதிவாகியுள்ளது, மேலும் இது 8% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசிய நாட்டவர்களின் எண்ணிக்கை
அதன்படி, பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 70,000 முதல் 100,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிகளைக் காண வரும் தெற்காசிய நாட்டவர்களின் எண்ணிக்கையை 100,000 இலிருந்து 200,000 ஆக உயர்த்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |