பலத்த காற்று தொடர்பில் மக்களுக்கு வௌியான எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Meteorology
By Raghav
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று
நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில நேரங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி