பிறந்த சிசுவை கொன்று வீதியில் வீசிய பெற்றோர் கைது!
முல்லேரியா பண்டார மாவத்தை பகுதியில் பிறந்த சிசுவை கொன்று வீதியில் வீசிய பெற்றோரை முல்லேரியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் காவல்துறை காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை

அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (8) இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன், சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வீசியுள்ளதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தக் கறைகளைத் தொடர்ந்து சென்ற காவல்துறையினர் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று குறித்த ஜோடியை கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம்தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.