திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலை : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

Trincomalee Sri Lanka Weather
By Harrish Nov 27, 2024 07:00 AM GMT
Report

புதிய இணைப்பு 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு, பச்சநூர், சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை மேவி வெள்ளநீர் பாய்ந்து செல்வதனால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதை காணக் கூடியதாக உள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மூதூர் -அறபாநகர், பாலநகர் கிராமங்களிலுள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலை : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு | Bad Weather Today Sri Lanka

இரண்டாம் இணைப்பு 

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இன்று (26) வரைக்கும 623 குடும்பங்களை சேர்ந்த 1789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.

இதில் சேருநுவர பிரதேச செயலக பகுதியில் 26 குடும்பங்களை சேர்ந்த 69 நபர்களும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 440 குடும்பங்களை சேர்ந்த 1152 நபர்களும், தம்பலகாமம் பிரிவில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 40 நபர்களும், வெருகல் பிரதேச செயலக பிரிவில் 01 குடும்பத்தை சேர்ந்த 2 நபர்களும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 148 குடும்பங்களை சேர்ந்த 526 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 177 குடும்பங்களைச் சேர்ந்தோர் உறவினர்களின் வீடுகளிலும், 19 குடும்பங்கள் இடைத் தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

திருகோணமலையில்(Trincomalee) நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை சுமார்  86 குடும்பங்களைச் சேர்ந்த 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையினால் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், கிண்ணியா, தம்பலகாமம், புல்மோட்டை மற்றும் குச்சவெளி உட்பட பல பிரதேசங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

அத்துடன், திருகோணமலை நகரசபையின் செயலாளர் தே. ஜெயவிஷ்ட்ணு திருகோணமலை நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலை : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு | Bad Weather Today Sri Lanka

மேலும், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை கிண்ணியாவில் முன்னெடுத்து வருகின்றனர்.

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம்: இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026