பம்பலப்பிட்டியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Colombo
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    கொழும்பு - பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (11) இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
காவல்துறையினரின் விசாரணை
குறித்த வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை திடீரென வீதிக்குச் செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        