நியூஸிலாந்து அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில்(11 ஆவது போட்டி) நியூஸிலாந்து அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
வெற்றியிலக்கு
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, முஷ்பிகுர் ரஹீம் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், நியூஸிலாந்து அணியின் லொக்கி பெர்குசன் 49 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 246 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக, டேரில் மிட்செல் 89 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட லொக்கி பெர்குசன் தெரிவானார்.
நாளையதினம்(14) இடம்பெறவுள்ள 12 ஆவது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.