நாளொன்றுக்கு 50 இலட்சம் உழைக்கும் அரச அதிகாரிகள்? அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு
கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 16 அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்கள் வேலை வாயப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் அவர்களுக்கு போலி பதிவு சான்றிதழ்களை வழங்கி பெருமளவு பணத்தை சம்பாதித்துள்ளதாக பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட போலி சான்றிதழை வழங்குவதற்காக இந்த அதிகாரிகள் சுமார் ரூ .10,0000 வசூலிக்கிறார்கள் என்றும் பதிவு செய்யப்படாத சுமார் 50 நபர்களுக்கு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாக இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு நாளைக்கு சுமார் ரூ .50 லட்சம் சம்பாதிக்கும் இந்த அதிகாரிகள் அந்த தொகையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், என்றார்.
கொவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், இந்த நாட்களில் சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்கள் அனுப்பப்படுவதாகவும், வெளியேறியவர்களுக்கு பணியகத்தால் போலி பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.