ஷேக் ஹசீனாவை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை : வங்காளதேச அரசின் அதிரடி அறிவிப்பு

Sheikh Hasina Bangladesh World
By Shalini Balachandran Nov 10, 2024 05:02 PM GMT
Report

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மற்றும் தப்பியோடிய பிற நபர்களை நாட்டிற்கு கொண்டு வர இன்டர்போலின் உதவியை நாடப்போவதாக வங்காளதேச (Bangladesh) இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை தீவிர போராட்டம் நடைபெற்றது.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடினர்.

கனடாவில் இந்துக் கோயிலில் நடந்த தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கனடாவில் இந்துக் கோயிலில் நடந்த தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வன்முறை மற்றும் மோதல்

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த வன்முறை மற்றும் மோதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

ஷேக் ஹசீனாவை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை : வங்காளதேச அரசின் அதிரடி அறிவிப்பு | Bangladesh Government Seeking Interpol Assistance

நாட்டில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் ஒகஸ்ட் ஐந்தாம் திகதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் (India) தஞ்சம் புகுந்தார்.

அவரை நாடு கடத்தி, வங்காளதேசத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முகம்மது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு மேற்கொண்டு வருகின்றது.

உக்ரைனின் எதிர்பாராத தாக்குதல்: மொஸ்கோவில் மூடப்பட்ட மூன்று விமான நிலையங்கள்

உக்ரைனின் எதிர்பாராத தாக்குதல்: மொஸ்கோவில் மூடப்பட்ட மூன்று விமான நிலையங்கள்

இனப்படுகொலைகள் 

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஹசீனா உள்ளிட்டவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஷேக் ஹசீனாவை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை : வங்காளதேச அரசின் அதிரடி அறிவிப்பு | Bangladesh Government Seeking Interpol Assistance

இந்தநிலையில், ஷேக் ஹசீனா மற்றும் தப்பியோடிய பிற நபர்களை நாட்டிற்கு கொண்டு வர இன்டர்போலின் உதவியை நாடப்போவதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் இன்று (10) தெரிவித்துள்ளது.

இன்டர்போல் மூலம் விரைவில் ரெட் நோட்டீஸ் வெளியிடப்படும் என்றும், தப்பியோடியவர்கள் உலகில் எங்கு மறைந்திருந்தாலும் அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சட்ட அமலாக்கத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்: தவிக்கும் லெபனான் மக்கள்

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்: தவிக்கும் லெபனான் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021