மிரிஹான போராட்டத்தின் எதிரொலி! காவல்நிலையத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட போராட்டக்காரர்கள் (படங்கள்)

Police Protest Gotabaya SriLanka Mirihana
By Chanakyan Apr 01, 2022 06:59 AM GMT
Report
Courtesy: படங்கள்: நுவான்போபகே

அரச தலைவர் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 54பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சிலர் மிரிஹான காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள மக்கள் அதனை பொறுத்துக் கொள்ளமுடியாத நிலையில் நேற்றைய தினம் இரவு அவரது இல்லத்திற்கு முன்னால் அமைதியாக முறையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் சமூக ஊடகங்கள் ஊடாகப் பகிரப்பட்ட நிலையில் மக்கள் பல இடங்களில் இருந்து வருகை தந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். நிலையினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  இதனால் விசேட அதிரப்படை மற்றும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். 

காவல்துறையினரின் வாகனம் போராட்டக்காரர்களை மோதியதை அடுத்து பேருந்து தீ வைக்கப்பட்டது. மேலும் பல வாகனங்கள் தீவைக்கப்பட்டு போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. 

இதன்போது பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி வேட்டுக்களை வைத்து  கலைக்க முற்பட்டனர். அதுவும் தோல்வியில் முடியவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தின் பின்னர் 54பேர் கைது செய்யப்பட்டனர். மிரிஹான காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி