கோட்டாபய-மஹிந்த அரசாங்கம் தோல்வியுற்றதன் அறிகுறியே பசிலுக்கான உரிமைகோரல்!
பசில் ராஜபக்ஷவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறுவது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தோல்வியடைந்துள்ளனர் என்பதே பொருள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான உரிமைகோரல்கள் ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைக் காரணம் காட்டி கோட்டாபய ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவினால் செழிப்பான நாட்டை கொண்டு செல்ல முடியாது கோட்டாபய ராஜபக்ஷவால் மட்டுமே அதைச் செய்ய முடிம் என்ற கருத்தியலை உருவாக்கியே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பசில் ராஜபக்ஷ ஏற்கனவே இந்த அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார் என்றும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர் அவர்தான் என்றும் அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார்.