அமைச்சுப் பதவி தொடர்பில் வெளியான செய்தியில் உண்மை இல்லை - மைத்திரி வெளியிட்ட அறிவித்தல்
இரண்டாம் இணைப்பு
பசில் ராஜபக்சவுடன் இணைந்து தான் அமைச்சுப் பதவியை ஏற்கவுள்ளதாக வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெறவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று தனது முகப்புத்தக பக்கத்தில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மறுப்பு வெளியிட்டிருக்கிறார்.
முதலாம் இணைப்பு
பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக உள்ளக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியின் கீழ் கொழும்பு துறைமுக நகரம், முதலீட்டு சபை உட்பட தற்போது நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பல உள்ளடக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, தனக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.
சமகால அரசாங்கம் பதவியேற்ற போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதான அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படும் என அதிகளவில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,