எம்.பி ஆகும் முன்னரே அமைச்சராகும் பசில்?
minister
basil
mp
slpp
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுவதற்கு முன்னரே பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதென முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பசிலின் நாடாளுமன்ற வருகை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைக்கு முகங்கொடுக்க வேண்டுமாயின் பசில் ராஜபக்ஷ அமைச்சராவது அவசியம்.
முச்சக்கர வண்டியில் இருக்கும் மூன்று டயர்கள் போல மஹிந்த, கோட்டா, பசில் செயற்படுகின்றனர். ஆனால் தற்போது இரண்டு டயர்கள் மாத்திரம் இருப்பது முன்னோக்கிச் செல்ல தடையாக இருக்கிற.
அதனால் பசில் நாடாளுமன்றம் செல்ல வேண்டியது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி