உறுதியானது பசிலின் நாடாளுமன்ற பிரவேசம்? விட்டுக் கொடுக்கும் எம்.பிக்கும் முக்கிய பதவி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஜூலை 8ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், அவர் 6ஆம் திகதி நாடாளுமன்றுக்கு வருவார் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது சுயதனிமைப்படுத்தல் காலம் 6ஆம் திகதியே நிறைவு பெறுவதால் 8ஆம் திகதி நாடாளுமன்றம் வருவார் எனக் கூறப்படுகிறது.
பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றிற்கு அனுப்பும் நோக்கில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்யவுள்ளார்.
இவ்வாறு இராஜினாமா செய்யும் அவருக்கு பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்கவுள்ள கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கு ரஞ்சத் பண்டார இணக்கம் வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.