கோட்டாபயவுக்கு அருகில் பசில் - வெளிவந்த முக்கிய தகவல்
srilanka
basil
political
parliament
gotabaya
By S P Thas
நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் பசில் ராஜபக்ஷவிற்கு சபையில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அருகில் 9ம் இலக்க ஆசனம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நிதியமைச்சர் அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்ய வாய்ப்புக்கள் இருப்பதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் பசிலின் நாடாளுமன்ற வருகையினால் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தினை சீர் செய்ய முடியாது என்று எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி