என்ன நடந்தாலும் மொட்டுக்கே வெற்றி! பசில் புகழாரம்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்த பசில் ராஜபக்ச இன்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு திரும்பிய அவர் பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள்
பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் வழமையானவை எனவும் அரசியல் இது சகஜமானது, எதிர்வரும் அதிபர் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்த போது நாட்டை விட்டு செல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் கட்சியின் ஒழுங்கமைப்பு பணிகளை தாம் மேற்கொள்ள தயார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |