மத்தியக் கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்...! முக்கிய கலந்துரையாடலில் புடின்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர், தொலைபேசி வாயிலாகப் பிராந்தியப் பதற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சவுதி அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய கிழக்கில் நிலவும் தீவிர இராணுவ மோதல்கள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்துள்ளனர்.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பது குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர முயற்சி
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்த உரையாடலின்போது புடின் வலியுறுத்தியதாகக் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்